தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தகடூர் வடமாடு மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா வரும் 05.02.2022 சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று காலை பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும்விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்:திருமதி சுமதி காளியப்பன் , ஊர் கவுண்டர்கள்: P.கண்ணன்,R.சரவணன், விழாப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.