பாமக மாநில தலைவரும், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினருமான ஜிகே மணி ஒட்டனூர் கோட்டையூர் பாலம் அமைய உள்ள காவிரி ஆற்று பகுதிகளை அதிகாரிகளுடன் பரிசலில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது ஜி.கே.மணி எம்.எல்.ஏ செய்தியாளர்களுடன் பேசியதாவது: தர்மபுரி, சேலம் மாவட்டத்தை இணைப்பதற்கு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற 50 ஆண்டுகால கோரிக்கை, நீண்ட நாள் கனவு திட்டத்தை தற்போது தமிழக முதலமைச்சர் அவர்கள் 250 கோடியில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் இந்த அறிவிப்பு மகத்தான அறிவிப்பு வரவேற்கக்கூடிய அறிவிப்பும், இதற்கு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை மனதார வரவேற்கிறோம் இந்த காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் என்பது தர்மபுரி சேலம் இரண்டு மாவட்டங்களை இணைப்பது என்பதோடு கேரள மாநிலம் கொச்சின், கோயமுத்தூர், ஈரோடு, பவானி, கொளத்தூர், பென்னாகரம், பாலக்கோடு, ஓசூர், பெங்களூர், மும்பை என்று மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலையாக எதிர்காலத்தில் அமைய இருக்கிறது.
இது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கும் போக்குவரத்துக்கும் வாய்ப்பாக அமையும். இதனால் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் குறையும். அதனால் போக்குவரத்து நேரமும் குறையும், எரிபொருள் சிக்கனம் ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இது எங்கள் மருத்துவர் ஐயா அவர்கள் நீண்ட நாள் கோரிக்கை எங்கள் சின்னைய அன்புமணி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அவருடைய கோரிக்கை. நான் 1996 சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொது கோரிக்கை வைத்தேன்.
இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திட்டம் நிறைவேறுவதற்கு எதிர்காலத்தில் இந்த திட்ட பணிகள் மிக வேகமாக நடைபெறுவதற்கு கூடிய விரைவில் நம்முடைய முதலமைச்சர் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், துறையுனுடைய அதிகாரிகள் அத்துணை பேருக்கும் பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசியல் சார்பற்று மக்களுடைய வளர்ச்சித் திட்டம் என்ற அடிப்படையிலேதான் இதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டனூர், கோட்டையூர் காவிரி பாலம் இது ஒரு பொது மக்கள் கோரிக்கை, நாகமரை பண்ணவாடி இந்த இரண்டு ஊர்களை இணைக்கும் காவிரி ஆற்றின் பாலம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ரெண்டுல நாகமரை பண்ணவாடி என்பது நீண்ட தூரம் அதனாலதான் அதிகாரிகள் ஆய்வு பின்பு அதைவிட குறைவான தூரமாக இது என்று சொல்லி அதிகாரிகள் முடிவுக்கு ஏற்ப முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதன் முதல்கட்ட ஒதுக்கீடு 250 கோடி திட்ட மதிப்பு மேலும் கூடும் என எதிர்பார்க்கிறோம், இதற்கு முதலமைச்சர் அவர்கள் ஆவண செய்வார்கள்.
இதனுடைய மொத்த நீளம் 800 மீட்டர் சுமார் 2600 அடி, மேட்டூர் அணையின் நீர் தேக்கம் 120 அடி அதனால் பாலத்தின் உயரம் 130 அடி உயரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமா 250 கோடி இது மிகப்பெரிய வளர்ச்சி திட்டம் அமையும். மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் எங்கள் மருத்துவர் ஐயா அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை மருத்துவர் அன்புமணி அவருடைய வேண்டுகோள். ஜி.கே.மணி தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியது.
நாடாளுமன்ற . சட்டமன்ற, உறுப்பினர்கள், அதிகாரிகள் எல்லாருடைய முயற்சியால் நடைப்பெற்துள்ளது. தனிநபர் முயற்சி என நான் சொல்ல விரும்பவில்லை. எல்லோருடைய முயற்சியின் அடிப்படையில் இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. திட்டம் மிக விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் வரவேற்பையும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2 மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன் இளநிலை பொறியாளர் தமிழரசு, மாவட்ட தலைவர் செல்வகுமார் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் மாது, ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துசாமி, தங்கராஜி, மாணிக்கம், பாமக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, மந்திரி படையாட்சி, ஒன்றிய செயலாளர்கள் ராசா உலகநாதன் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.