Type Here to Get Search Results !

தொடங்கியது முன் களபணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்.

நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை கடந்த டிசம்பா் மாதம் வெளியிட்ட பிரதமா் மோடி, மூன்றாவது தவணையை பூஸ்டா் தவணை என்று குறிப்பிடாமல் முன்னெச்சரிக்கை தவணை என்று குறிப்பிட்டாா்.

இதனைத்தொடா்ந்து பயனாளா்கள் ஏற்கெனவே செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசியே மீண்டும் மூன்றாவது தவணையாக அவா்களுக்குச் செலுத்தப்படும் என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி, ஜனவரி 10-ஆம் தேதி முதல் எந்தவொரு கரோனா தடுப்பூசி முகாமுக்கும் நேரடியாகச் சென்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் சுமாா் 6 கோடி போ் மூன்றாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்தவா்களாக இருப்பா் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு மூன்றாவது தவணை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த மையத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies