தருமபுரிமாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் குடும்ப அட்டைகள் (Smart Cards) / பெயர் சேர்த்தல்/ நீக்கல் / முகவரிமாற்றம் / தொலைப்பேசி எண் மாற்றம் / ஆதார் எண் சேர்த்தல் / நகல் அட்டை கோருதல் போன்ற பணிகளுக்கு இணையத்தில் பதிவு செய்ய பொதுமக்கள் நலன் கருதி Public Portal ( www.tnpds.gov.in) இலவசமாக இயங்கி வருகிறது. பொதுமக்கள் யாருடைய உதவியுமின்றி, தங்களுடைய கைப்பேசி வாயிலாகவும் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள் ஏதேனும் தகவல் தேவைப்படின் மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை கீழ்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மாறாக இடைதரகர்கள்/ மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் தங்களின் கோரிக்கை குறித்து அலுவலர்களை தனக்கு தெரியும் பணிகளை நான் முடித்து தருகின்றேன் என்பவருடைய விபரங்கள் குறித்த தகவல்களை மாவட் டகட்டுப்பாட்டு அறை எண் "1077", 04342 233299 மற்றும் 9445045610-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 5 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் யாரேனும் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தால் அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்களிடம் தனியார் இனையதள சேவை மையங்களில் (CSC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், தனியார் இணையதள சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள "ID" நிறுத்தம் செய்யப்படும் எனவும், சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் மீதுமேல் நடவடிக்கை தொடரப்படும் என ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இவ்வாறு மாவட்ட தெரிவித்துள்ளார்.
.gif)
