Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், அனைத்து வகையான குறைதீர்க்கும் கூட்டங்களும் இரத்து.

கொரோனா நோய் தொற்று (covid-19) கட்டுப்பாடுகள் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற திங்கட்கிழமை (10.01.2022) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் அனைத்து வகையான குறைதீர்க்கும் கூட்டங்களும் இரத்து செய்யப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்று (covid-19) கட்டுபாடுகள் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற திங்கட்கிழமை ( 10.01.2022) முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் அனைத்து வகையான குறைதீர்க்கும் கூட்டங்களும் இரத்து செய்யப்படுகிறது. 

இது குறித்து மறு அறிவிப்பு வெளியீடும் வரை இக்குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies