கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானுரெட்டி அவர்களின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு. கோவிந்தன் அவர்களின் வழிகாட்டுதலில், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் முத்துமாரியப்பன், மாவட்ட நலக் கல்வியாளர் சப்தமோகன், உதவி மலேரியா அலுவலர் செல்வம் அவர்களின் மேற்பார்வையில், சூளகிரி வட்டத்திற்குட்பட்ட டெங்கு நோய் பாதித்த டேப் இந்தியா என்ற தொழிற்சாலையில் கொசு புழுக்கள் ஒழிக்கும் பணியும் அரசு பொது சுகாதார சட்ட விதிகள் அடங்கிய நோட்டிஸ் வழங்கப்பட்டது.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி, சுகாதார மேற்பார்வையாளர் சுமதி ஆய்வாளர்கள், தினேஷ், கவியரசன், வினோத்குமார், அறிவழகன், சக்தி, ஜெய முருகேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் அத்தொழிற்சாலையின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
ஃபர்ஸ்ட் ஸ்டெப் பேபி வேர் என்ற மற்றொரு தொழிற்சாலையில் கோவில் விழிப்புணர்வு தொடர்பான பொது சுகாதார நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்த நோட்டீசை அந்நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். கம்பெனியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நலக் கல்வி, மாவட்ட நலக் கல்வியாளர் சப்த மோகன் அவர்களால் தமிழிலும், மனிதவள மேலாளர் விஜயகுமார் அவர்களால் இந்தியிலும், அங்குள்ள பணிபுரியும் ஆட்களுக்கு எடுத்துரைத்தார்.
விழிப்புணர்வுகான ஏற்பாடுகள் அனைத்தும் நர்மதா மற்றும் மனிதவள மேலாளரால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது.
.gif)
