இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என சட்டமன்றத்தில் கூறியபொழுது தமிழக முதல்வர் துறைக்கான அமைச்சர் நேரு துரை முருகன் ஆகியோரை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தார் அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் நேரில் வந்து ஆய்வு செய்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் பணிக்காக 4600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அண்மையில் அறிவித்திருந்தார். இந்த திட்டம் அனைவராலும் வரவேற்கக் கூடிய வரலாற்று திட்டம். இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ஒகேனக்கல் முதலை பண்ணை, யானை பள்ளம், கணவாய் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நீரேற்று நிலையம், பென்னாகரம் அருகே பருவத்தின்அள்ளி பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 163 குதிரைத்திறன் கொண்ட நான்கு மின் மோட்டார்களின் மூலம் நாளொன்றுக்கு 160 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அமையவுள்ள இரண்டாம் கட்ட குடிநீர் திட்டப் பணிகளில் அதே திறன் கொண்ட 10 மோட்டார்கள் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் வினியோகிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகளில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கிராமங்களில் நபர் ஒன்றுக்கு 55 லிட்டரும், நகரப் பகுதிக்கு 135 லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும்.
கிராமங்கள்தோறும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தருமபுரியில் அமைய உள்ள சிப்காட் பணிகளுக்கு தண்ணீர் வழங்க திட்டமிட்டது போல் பென்னாகரத்தில் அமைய உள்ள சிட்கோ தொழிற்பேட்டை களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றும்போது ஆழ்துளை கிணறுகளை புளோரைடு கலந்த நச்சுத்தன்மை கொண்ட தண்ணீர் முற்றிலுமாக தடுக்கப்படும். தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிக்காக 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.