தமிழ்நாடு ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் 2-வது மாநிலபிரதிநிதித்துவப்பேரவை தருமபுரி பூபதி மண்டபத்தில் உள்ள தோழர் நா.முனியாண்டிசாமி நினைவரங்கத்தில் நடைபெற்றது.
மாநிலதலைவர் ச.இராமமூர்த்தி தலைமைவகித்தார், மாநிலதுணைத்தலைவர் இரா.சுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
கெளரவதலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் வரவேற்ப்புகுழு தலைவருமான ஆர்.ஆறுமுகம் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ.பழணியம்மாள் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார், மாநிலபொதுச்செயலாளர் பா.ரவி வேலை அறிக்கை வாசித்தார். மாநிலபொருளாளர் மு.மகாலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
டி.என்.ஆர்.டி.எஸ்.ஒ.ஏ மாநிலதலைவர் அ.கென்னடிபூபாலராயன் மாவட்ட கருவூல அலுவலர் சி.சுப்பிரமணியன் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலபொதுச்செயலாளர் ச.பாரி சங்க மாநிலதலைவர் கே.ஆர்.அப்பாவு, ஆகியோர் வாழ்த்திபேசினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நிறைவுறையாற்றினார்.
பேரவையில் பங்கேற்ற 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு தருமபுரி மாவட்ட தலைவர் கே.கேசவன் பொன்னாரை அணிவித்து கெளரவித்தார். முன்னதாக சங்ககொடியேற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் ஓய்வூதிய பலன்கள் அனுமதிக்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கான குடும்ப பதுகாப்பு நிதியாக தற்போது வழங்கப்படும் ரூ 50000 உயர்த்தி ரூ 3 இலட்சமாக வழங்கவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட 4 தவனை 14 சதவிகித அகவிலைப்படி 2021ஜூலை 1ம் தேதி முதல் வழங்கவேண்டும். 70,வயது துவங்கும் நாளில் இருந்து 10 சதவிதம் கூடுதல் ஓயவூதியம் வழங்கவேண்டும்.
ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்ய வேண்டும், சங்க நடவடிக்கைக்காக பழிவாஙகும் நோக்கத்துடன் தற்காலிகப் பணிநீக்கம் செய்து ஓய்வுபெற அனுமதி மறுக்கப்பட்டுள்ள அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலதலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஓய்வூதியர் குறைகளைவு கூட்டம் நடத்திய ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு தீர்வுகானவேண்டும்.குடும்ப ஓய்வூதியம் 50 விழுக்காடக உயர்த்தி வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
ஒருமாத ஓய்வூதியம் போனசாக வழங்கவேண்டும். மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஓயவூதியம் ரூ 9000 வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் ஓய்வூதியர்களுக்கு இலவசபஸ்பாஸ் வழங்கவேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, வரவேற்புகுழு செயலாளர் எம்.பாபு நன்றி கூறினார்.