Type Here to Get Search Results !

உலக ஈரநிலம் தின சம்மந்தப்பட்ட புகைப்படப் போட்டியில் பங்கேற்க வனத்துறை அழைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஈரநிலம் சம்மந்தப்பட்ட புகைப்படப் போட்டியில் பங்கேற்க வனத்துறை அழைப்பு எதிர்வரும் 2022 பிப்ரவரி 2-ம் நாள் உலக ஈரநில தினத்தை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தால் புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது.

ஈரநிலங்களின் வளமான மதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். இப்போட்டியில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சதுப்பு நில ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம். இது குறித்தான பதிவுகளை எதிர் வரும் 26-01-2022ம் தேதி மாலை 5.00 மணிக்குள் dfodharmapuri@gmail.com என்ற இணையதள முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் உலக ஈரநில தினத்தில் கௌரவிக்கப்படுவதோடு, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படம் வனத்துறை உயர் அலுவலர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படும். 

இப்போட்டி தொடர்பான பிற தகவல்களுக்கு தருமபுரி வனச்சரக அலுவலர் அலைபேசி எண் 9442916530-ஐ தொடர்பு கொள்ளவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies