Type Here to Get Search Results !

ஞாயிறு ஊரடங்கு; நல்லம்பள்ளி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு.

கொரானா வைரஸ் தொற்று மூன்றாம் அறை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தியது, இதனையடுத்து மாநிலத்தின் அணைத்து பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

தருமபுரி நகரின் நுழைவு பகுதியான நல்லம்பள்ளி மற்றும் அதியமான்கோட்டையில் காவல்துறை சார்பில் பிரதான சாலையில் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர், தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரியும் நபர்களிடம் விசாரணை நடத்தி, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

இன்றைய முழு ஊரடங்கினால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நல்லம்பள்ளி பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies