அரூர் அருகே மர்மான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அரூர் வட்டம், சங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்த செட்டி மகன் ஸ்டாலின் (35). செல்லம்பட்டி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக பணிபுரிந்தார்.
ஸ்டாலின் கடந்த வெள்ளிகிழமை மாலை வீட்டில் இருந்து தமது நண்பர்களுடன் வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம் இந்த நிலையில், காவப்பட்டியில் ஊருக்கு தண்ணீர் வழங்கும் ஊராட்சி கிணறு அருகே ஸ்டாலினுக்கு சொந்தமான இருசக்கர வண்டி கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்குள்ள கிணற்றில் சோதனை செய்ததில் இளைஞர் ஸ்டாலினின் சடலம் இருப்பது தெரியவந்தது. அவரது முகம் மற்றும் தலைப்பகுதியில் காயங்கள் இருந்ததாம். இளைஞர் ஸ்டாலினை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் அவரது சடலத்தை கிணற்றில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
.gif)
