மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம் மக்களின் நலன் காக்க ரூ.5000 கோடி மதிப்பில் அறிவித்த திட்டங்களை மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டங்களை பெற்றுத்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் அலோசனைபடி துண்டு பிரசுரங்களாக இன்று தருமபுரி உழவர் சந்தை பகுதியில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான தடங்கம்.பெ.சுப்ரமணி., அவர்கள் வழங்கி திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் தருமபுரி நகர திமுக பொறுப்பாளர் மே.அன்பழகன், திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, திமுக அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, சக்திவேல் காசிநாதன், செல்லதுரை, முத்துக்குமார், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
.gif)
