Type Here to Get Search Results !

மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கல்.

மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கூர்க்காம்பட்டி, தண்டா பகுதியில் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( தமிழ்த்துறை), மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை, தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளர்கள் நலச் சங்கம் இணைந்து கிராமங்கள் தோறும் தமிழ்த் திருவிழா என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.  ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர் நா.நாகராஜ் வரவேற்றார். 

மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நா.மகேந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய வானொலி நிலையம் தருமபுரி பண்பலை அறிவிப்பாளர் ஏரியூர் கே.கார்த்திக் முன்னிலை வகித்தார். கல்லூயின் வேதியியல் துறைப் பேராசியர்கள் மா.பாலாஜீ ,   பா.பெருமாள் ,சு.ரகுபதி வாழ்த்துரை வழங்கினர். தருமபுரி சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் தலைமையாசிரியர் மா.பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிராமப் புற மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம், எழுதுப்பொருள்களை வழங்கினார். 

கல்லூரியின் கணிதத் துறை மாணவி கோ. ஷிலா நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளர்கள் நலச் சங்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.சந்தோஷ் குமார் நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies