தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஆங்காங்கே பரவி பொது மக்களை பீதி அடைய செய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் கொரோனா தடுப்பூசி மையங்கள் சனிக்கிழமைகள் முகாம்கள் அமைக்கப்பட்டன, இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மையத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த தடுப்பூசி மையத்தில் சூளகிரி வட்டாட்சியர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் விஜி,கிராம நிர்வாக அலுவலர் சங்கர், பஜார் தெரு வார்டு உறுப்பினர் அப்சர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
.gif)
