ஊர்கவுண்டர் காளியப்பன், மந்திரி கவுண்டர் ஜம்பேரி, ஊர் பெருந்தனக்காயர் ரங்கன், இன்டூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கன்னியப்பன், சமூக ஆர்வலர் சிவகுரு, இளைஞர் மன்ற தலைவர் இனியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நத்தள்ளி ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் மற்றும் மீன்வளத்துறை பணியாளர் விக்னேஷ் வர்மன் இருவரும் மகாத்மா காந்தியடிகள் இந்திய திருநாட்டிற்கு ஆற்றிய பணிகள் பற்றி பேசினர்.
பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும், மெழுகு வர்த்தி ஏற்றியும் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நோக்கவுரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நல்லம்பள்ளி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் முருகன் நன்றி கூறினார்.