Type Here to Get Search Results !

மின் கசிவு காரணமாக பிரபல துணிக்கடையில் தீ விபத்து; 5 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்.

தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் முன்பு  நான்குமாடி  துணிக்கடையில் திடிர் தீவிபத்தால் சுமார் 5 கோடி மதிப்பிலான துணிகள்  எரிந்து நாசம், தருமபுரி  புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள  கடைவீதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இப்பகுதியில் நான்கு அடுக்குமாடியில் சூர்யா என்கிற டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடை உள்ளது. 

இந்த துணிக்கடை பொங்கல் முடிந்து விடுமுறையளிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக பூட்டி உள்ளது, இந்த நிலையில்  இன்று இரவு 8 மணியளவில்  துணிக்கடையிலிருந்து புகை வருவதாக தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள்  தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர்  கடையின் பூட்டை உடைத்து தண்ணீர் பீய்ச்சியடைத்தனர். 

ஆனால் தீவிபத்து  முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளதால் உள்ளே செல்ல முடியாமல்  சுவற்றை துளையிட்டு தண்ணீர் கொண்டு பீய்ச்சியடித்தனர். அதற்குள்ள  உள்ள துணிகள் எரிந்து கரும்புகை வீசியதால்  சுற்றி உள்ள பகுதி கரும்புகையாக மாறியது. பின்னர் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கடைக்குள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

கடைக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை இந்த தீ விபத்தால் கடையில் இருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என வுிசாரணையில் தெரியவந்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies