Type Here to Get Search Results !

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.4.11 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.4.11 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம், குருபரப்பள்ளி, சென்னசந்திரம், நேரலகிரி, நாச்சிக்குப்பம், மாதேப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.4 கோடியே 11 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பல் நடந்து வரும் கிராம சாலை பணிகள், அங்கன்வாடி, மகளிர் சுய உதவிக்குழு கட்டிட கட்டுமான பணிகள், மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சின்னகொத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கானாற்றில் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, அந்த பணிகளை அளவீடு செய்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். இதே போல் சென்னசந்திரம் ஊராட்சியில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள், நேரலகிரி ஊராட்சி கொத்தகிருஷ்ணப்பள்ளியில் ரூ.9 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் பெரிய பண்ணை குட்டை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். 

நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிட வளாக கட்டுமான பணிகள் உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார், இந்த ஆய்வின் போது, துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா, ஒன்றிய பொறியாளர்கள் முருகேசன், குமார், பணி மேற்பார்வையாளர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies