Type Here to Get Search Results !

38 ஆண்டுகளுக்கு பின் அணையில் நீர் நிரம்ப முயற்சித்தவர்களுக்கு கிராம மக்கள் மரியாதை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியயை அடுத்த  வேம்பள்ளி அருகே அமைந்துள்ள சூளகிரி சின்னார் அணையில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அணை நிரம்பியதையடுத்து பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டு கொண்டாடினார்கள்.

சூளகிரி பகுதியை சேர்ந்த சின்னார் ராமசாமி, ஜெகதீசன், நந்தக்குமார் ஆகியோரின் தீவிர முயற்சியால் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு அணைக்கு நீர் கொண்டுவரப்பட்டது.

அணை கட்டபட்ட நாள் முதல்  தற்போது தான் நிரம்பிய சூளகிரி சின்னார்  அணை : அணை நீரை வரவேற்க்கும் விதமாக அப்பகுதி மக்கள் அணை அருகே சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டு கொண்டாடினார்கள்.

மேலும் சூளகிரி சின்னார் அணை பாராமரிக்கபட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படவேண்டும் எனவும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டால் 20 மேற்ப்பட்ட  கிராமங்களுக்கு குடிநீருக்கும் விவசாயத்திற்க்கும் உபயோகமாக இருக்கும் என விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் கெலவரப்பள்ளியில் இருந்து வரும் உபரிநீர் மருதாண்டப்பள்ளி  துரை ஏரி வழியாக சூளகிரி சின்னார் அணை நிரம்பி மார்க்கண்டேயன் ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி KRP அணையில் சென்று தென்பென்னை ஆற்றில் கலப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அணைக்கு நீர் கொண்டுவர தீவிர முயற்சி செய்த சின்னார் ராமசாமி, ஜெகதீசன், நந்தக்குமார் ஆகிய மூவரையும் சூளகிரி சுற்றுவட்டார கிராம மக்கள் மாலைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies