தருமபுரி மாவட்ட ஆட்சியரக கூடுதல் கூட்டரங்கத்தில் மக்கள் திட்டமிடல் இயக்கம் 2022-2023, People's Plan Campagin (Sabki Yojana Sabka Vikas) கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் மற்றும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த அனைத்து துறை தலைமை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது, பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சதிவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் தொடங்கப்படும். ஊராட்சியில் உள்ள வள ஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கூட்டத்தில் பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகளும் மக்கள் திட்டமிடல் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு, கிராம சபையிலும் விவாதிக்கப்பட்டு, முழுமையான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும். கிராம ஊராட்சிகளில் உள்ள வள் ஆதாரங்கள், தேவைகள், மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், நிதி ஆதாரங்கள், பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து ஆய்வு செய்து கண்டறிந்து ஒரு முழுமையான திட்டம் தயாரிக்க இது உதவியாக இருக்கும். இதுபோல வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சிக்கும் ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும், இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிதிவ்யதர்சினி.ச., இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் திரு.பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அ.சீனிவாச சேகர், அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் மாவட்ட பயிற்சி ஓருங்கிணைப்பாளர், திரு.அ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)
