காவல்துறையினரால் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளான ஓசூர் தொழிலதிபருக்கு 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
தொழில் ரீதியாக பணத்தகராறு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் காவல்துறையினர் தன்னை சட்டவிரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் விதயரன்யா புகார்.
இழப்பீடு தொகை 11 லட்ச ரூபாயில், 4 லட்ச ரூபாயை காவல் ஆய்வாளர் சரவணனிடமும், 5 லட்ச ரூபாயை உதவி ஆய்வாளர் சுரேஷிடமும், 2 லட்சத்தை உதவி ஆய்வாளர் பார்த்திபனிடமும் வசூலிக்கு அரசுக்கு உத்தரவு.
அத்துமீறும் காவல்துறையினருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை.
.gif)
