ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா ரமேஷ் அவர்கள் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர் அதனடிப்படையில் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், அவர்கள் பொரியாளர்களுடன் பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தனர் பின்னர் பணிகள் அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர்.
அதனடிப்படையில் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க ரூ.5,50,000 மதிப்பீட்டில் அனாசந்திரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு புதிய மின்மோட்டர்,கேபில் வயர்,மற்றும் பைப்லைன் அமைக்க ரூ.5,00,000மதிப்பீட்டில் பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு ஒன்றிய குழு தலைவர் லாவண்யாஹேம்நாத், அவர்கள் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைத்தனர்.
ஓரிரு வாரங்களில் உடனடியாக பணிகள் தொடங்கி வைத்த சேர்மன் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது வட்டார வளர்சி அலுவலர் சிவகுமார், சுப்பிரமணி பொரியாளர் விமலா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா ரமேஷ், நரசிம்மன், வீராசமி, பெரிவேடி, பீமன், சின்னபயன், கோவிந்தன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், சின்னபையன், ரத்னவேல் ஊராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், ஊர் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.