கணிதத்துறையின் தலைமை பேராசிரியை திருமதி.உமா, ஆங்கிலத்துறையின் தலைமைப்பேராசிரியை டாக்டர்.கல்பனா, கணினித்துறையின் தலைமைப்பேராசிரியை டாக்டர். லாவண்யா முன்னிலை வகித்தனர், இவ்விழிப்புணர்வுக்கூட்டத்தை மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன் அவர்கள் நடத்தினார், அரசுக்கல்லூரியின் அனைத்துப்பேராசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு விதிகள், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகழுவுதல், மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதான் அவசியம் மற்றும் கொசுக்களால் பரவும் வியாதிகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. விதிமுறைகள் பின்பற்றப்படாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதிக்கப்படுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றியும் விரிவாக மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன் எடுத்துரைத்தார்.