தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, மூக்கனூர் ஊராட்சி, தின்னப்பட்டியில் உள்ள ஏரிக்கு, எவ்வளவு மழை பெய்தாலும் அது வீணாகவே தான் போகின்றது, இதை சரி செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுடமும் அரசியல் தலைவர்களிடமும் பல மனுக்களும் கொடுத்துக்கொண்டே தான் உள்ளது.யாரும் இதனை சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை, டிசம்பர் மாதம் மட்டுமே மழையின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. "நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்" என சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர், எனவே அதன் அடிப்படையில் இந்த ஏரியின் நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி மிக விரைவில் தீர்வு காணவேண்டும் என தின்னப்பட்டி ஊர் பொது மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.