தருமபுரி மாவட்டம் பென்னாகரம் முத்துகவுண்டர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.செந்தில்குமார் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பசேகரன் தடங்கம் சுப்பிரமணி மற்றும் பென்னாகரம் ஒன்றிய குழுதலைவர் கவிதா இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்