மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் தகவல் தருமபுரி மாவட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஏரியூர் ராமசாமி கவுண்டர் பொன்னாம்மாள் மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது,
ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு முகாம் இன்று (23.12.2021) ஏரியூர் ராமசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் இந்த நிகழ்வில் அமைச்சர் பங்கேற்கவில்லை.
சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் மனுக்களுடன் வந்திருந்தனர். அமைச்சர் பங்கேற்காத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் தங்கள் மனுக்களை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.செந்தில்குமார் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பசேகரன் தடங்கம் சுப்பிரமணி மற்றும் பென்னாகரம் ஒன்றிய குழுதலைவர் கவிதா இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர், இதனால் ஏரியூரில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.