பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் Women Empowerment Cell சார்பாக பெண்கள் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி கோமதி காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் சிவகாசி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன் சமூக ஆர்வலர் கலந்துகொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க இயக்குனர் பொறுப்பு மோகனசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் திருமதி அனிதா நிகழ்வை ஏற்பாடு செய்செய்திருந்தார், உதவிப்பேராசிரியர் திருமதி பிரபா நன்றியுரை வழங்கினார்.