ஓசூரில் கை வலிக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரமணா பட பாணியில் மூன்று நாள் சிகிச்சை அளித்து உயிரிழந்ததாக கூறியதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள குணம் தனியார் மருத்துவமனையில் கை வலிக்காக அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி(58) என்னும் மூதாட்டிக்கு ஆஞ்சியோகிராம் செய்வதாக கூறி தவறான சிகிச்சையில் உயிரிழந்ததால் ரமணா பட பாணியில் மூன்று நாட்கள் சிகிச்சை அளித்ததாக கூறி மூதாட்டியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்