தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த வள்ளூர் பகுதியே சேர்ந்தவர் தம்பி மகன் ராஜா 44வயது இவர் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி எண் எழுதுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீசார் நேற்று மாலை பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடும்போது ராஜா அவருடைய மொபைல் போனிலிருந்து தடைசெய்யப்பட்ட கேரளா எண் எழுதி வாட்ஸ்ஹப்பில் அனுப்புவது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீசார் ராஜாவை கைது செய்து தர்மபுரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.