பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அறிவியல் வேளாண் நிலையத்தில் ஒருநாள் இலவச சிறப்புக் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது பாப்பாரப்பட்டி பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் திருமதி ஜனனி அவர்கள் தலைமையில் பாப்பாரப்பட்டி வேளாண் நிலைய இயக்குனர் முனைவர் விஜயகுமார் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.
கால்நடை மற்றும் நாட்டுக் கோழிகளுக்கு புற ஒட்டுண்ணி நீக்க சோப்பு இலவசமாக வழங்கப்பட்டது இம் முகாமில் பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான மாதேஹள்ளி எட்டியாம்பட்டி தொட்லாம்பட்டி கிட்டம்பட்டி மலையூர் பனைகுளம் வத்திமரதஹள்ளி முத்தூர் சோம்பள்ளி போன்ற கிராமங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகள் பயனடைந்தன மேலும் கால்நடைகள் கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு கால்நடைகள் பராமரிப்பு பற்றி பொதுவான வகுப்பு நடத்தப்பட்டது.