அரசாணை எண்.177 கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்துறை (மீன் 5) நாள்.13.09.2017 -ன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற மீன்வளத்துறையின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Guidelines) விண்ணப்பிக்க வேண்டும். பயனாளிகள் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பயிற்சி மையமாக சென்னையை தேர்ந்தேடுக்க வேண்டும்.
மீனவ சமுதாயத்தை சார்ந்த இளைஞர்கள் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணைதளத்தில் (28.12.2021 பிற்பகல் 6.00 மணிவரை ) விண்ணப்பித்த பிறகு அவர்கள் பெற்றிடும் பதிவு எண் (Registration Number) மற்றும் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே பயிற்சிக்கான நுழைவுத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி வாயிலோ (தொலைபேசி எண்: 04342-232311) அல்லது நேரிலோ தொடர்பு, கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அலுவலக முகவரி: மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், கதவு எண்:1/165A, இராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அஞ்சல், தருமபுரி கைப்பேசி எண்: 9384824260.