Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு.

தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கான (SPOT ADMISSION) காலவரம்பு 18.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை.

கல்வித்தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு:

கம்பியாள் (Wireman) (2 வருடம் ) பற்றவைப்பவர் (Welder) (1வருடம் )

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டட படவரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம் ), கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம் ), கம்மியர் டீசல் என்ஜின் (1வருடம்), கடைசலர் (2வருடம் ) மற்றும் இயந்திர வேலையாள் (2வருடம் ) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

2021ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் படி பதிவேற்றம் செய்யலாம். பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித் தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாட புத்தகம், விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லாசீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. 

பெண் பயிற்சியாளர்களுக்கும் விடுதி விரைவில் துவங்கப்படவுள்ளது. குறைந்த இடங்களே உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தகுதியுள்ள இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் மற்றும் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்கப்பெறாதவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் நேரடி சேர்க்கையில் கலந்துகொண்டு பயனடையுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பகட்டணம் ரூ.50/- சேர்க்கை கட்டணம் ரூ.185/195. மேலும் விபரங்களுக்கு 9688675686,8883116095, 9688237443 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் திரு.கா. இரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884