மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏழு வட்டங்களுக்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா, சிட்டாவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் பிரதிவாரம் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் நடைபெறுகிறது.
அதன்படி நடப்பு மற்றும் வரும் வாரத்தில் கீழ்கண்ட ஏழு வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் சிறப்பு முகாம்கள் 10.11.2021, 12.11.2021, 17.11.2021 மற்றும் 19.11.2021 ஆகிய தினங்களில் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகான ஏதுவாக உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.