விவசாயிகள் மரவள்ளி, மஞ்சள், சின்ன வெங்காயம் போன்ற பயிர்களுக்கு நன்கு வடிகால் மழைநீர் தேங்காத வண்ணம் பராமரிக்க வேண்டும். நிலபோர்வை அமைத்து சாகுபடி செய்தல் ஏற்றதாகும். மேலும் அழுகல் நோய் தடுக்க நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லியான டிரைக்கோடெர்மாவிரிடி பயன்படுத்த வேண்டும்.
காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு வடிகால் வசதி ஏற்படுத்துதல் தருமபுரி மாவட்டத்தில் குழித்தட்டு முறையில் நிழல்வலைக் குடில்களில் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு நாற்றுக்கள் மழையில் சேதம் அடையாமல் இருக்க மூடாக்கு அமைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உழவர் ஆர்வலர் குழுவின் ஈடுபாடு அனைத்து வட்டாரங்களிலும் உள்ள உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பயிர் சேதாரத்தை உடனுக்குடன் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்பு எண்கள் பின் வருமாறு
1. தோட்டக்கலை உதவி இயக்குநர் (ந.பொ) 9443084223 தலைமையிடம்
2. தருமபுரி வட்டாரம் 6369389361
3. நல்லம்பள்ளி வட்டாரம் 9443247427
4. பென்னாகரம் வட்டாரம் 9790161522
5. பாலக்கோடு வட்டாரம் 9600904914
6. காரிமங்கலம் வட்டாரம் 9677795513
7. மொரப்பூர் வட்டாரம் 9442483102
8. அரூர் வட்டாரம் 7418653569
9. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் 8015345067
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.