கேரளம் மாநிலம், கண்ணூரிலிருந்து பெங்களூரு அருகே உள்ள யஷ்வந்த்பூர் நோக்கி பயணிகள் விரைவு வந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை கடந்து தர்மபுரிக்கு வந்தபோது வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் கற்கள் பெயர்ந்து ரெயில் என்ஜின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் ரெயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. இதில் என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் தடம் புரண்டது.
ரெயில் தடம் புரண்டதில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதையடுத்து ரெயிலில் வந்த 1850 பயணிகளும் பேருந்தில் ஏற்ற்ப்பட்டு தர்மபுரி ரெயில் நிலயைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று பாதையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் திருமதி. S. திவ்யதர்ஷினி அவர்களும் தருமபுரி மாட்ட சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அவர்களும் பார்வையிட்டு சீரமைப்பிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.