Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்க தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம்.

அரூர் வேளாண்மை உதவி இயக்குநர் அறிவிப்பு தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு. சா. மோகன் சகாயராஜ் மற்றும் வேளாண்மை அலுவலர் திருமதி.அ.இளவரசி கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து அவற்றை செம்மையான முறையில் செயயல்படுத்தியும் வருகிறது. அவற்றில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்க செய்வதோடு மட்டும் அல்லாமல் அரூர் வட்டாரத்தின் சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாத்திடவும் விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் 2021-22 இவ்வாண்டு அரூர் வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரூர் வட்டாரத்திற்கு 35000 மரங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 

1. தேக்கு மரக்கன்றுகள்: 25000 எண்கள்

2. செம்மரக்கன்றுகள்  : 1500 எண்கள்

3. வேம்பு மரக்கன்றுகள்: 5000 எண்கள்

4. பூவரசு மரக்கன்றுகள்: 1150 எண்கள்

5. நெல்லி மரக்கன்றுகள்: 1850 எண்கள்

6. நாவல் மரக்கன்றுகள்:  500 எண்கள்

விவசாயிகளுக்கு நடுவதற்கு வழங்கிட  தயார்நிலையில் உள்ளது.

மரக்கன்றுகள் விநியோகம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மரங்கன்றுகளை பாராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/- வழங்கப்படும். 

மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்திட அரூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் விருப்பம் உள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக விவசாயிகள் தங்களின் பெயர்,முகவரி,செல்பேசி எண், வங்கிகணக்கு எண்; பதிவு செய்தும், தங்கள் பகுதி கீழ்கண்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டும் பயன்பெற  கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

1. அரூர் - திரு. மு. ரமேஷ் - 7373117307

2. K. வேட்ரப்பட்டி - திரு. ஞா.வினோத்குமார்-9585594002

3. H. கோபிநாதம்பட்டி - திரு. கா.ஜெயக்குமார்-9786195760

4. கோட்டப்பட்டி - திரு. ப.சிவன்-8012126706

5. தீர்த்தமலை -திரு. மா.கிருஷ்ணன்- 6380545955

அரூர் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மரங்கன்றுகளை நட்டு வரும் காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்திர வைப்பு தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களில் மண்வளம் அதிகரிப்பதோடு அல்லாமல் நமது அரூர் பகுதி பசுமைப் பரப்பும் சுற்றுப்புற சூழலும் மேம்படும் என தங்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884