கோமாரி நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், தீவனம் உண்ணாமை, பால் உற்பத்தி குறைந்து காணப்படும். வாயில் கொப்புளங்கள் உருவாகும் காய்ச்சல் மற்றும் வாயை அசைக்கும் போது கொப்புளங்கள் உடைந்து புண் ஏற்படும். எச்சில் சுரப்பு அதிகமாக இருக்கும் மற்றும் மாடுகள் நடக்க சிரமபடும் படுத்த நிலையில் சோர்வுடன் காணப்படும்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 மேற்ப்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்டுள்ளது.
கோமாரி நோயில் இருந்து கால்நடையை காப்பாற்ற விவசாயிகள் கால் நடை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த வித பதிலும் இல்லை எனவும், தெரிவித்து வருகின்றனர்.