நகர செயலாளர்கள் வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர்தமிழன், மாவட்ட துணை தலைவர்கள் வே.முத்துகுமார் சி.சம்பத் நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாநில செயற்குழு பி.இராமலிங்கம், நிர்வாக குழு க.நம்பிராஜன் முரளி, தகடூர் இரவி, பூபால், கே.எஸ்.சரவணன், ஆட்டோபாண்டியன், இராமன், கணேசன், முனிசிப்செல்வம், வெங்கடேசன், பிரபாகரன், பிரகாஷ், கௌரப்பன், சரவணன், குமரன், சக்திவேல், செந்தில்குமார், துரைராஜ், கிருபாகரன், கலீம், ரத்தினவேல்பாண்டியன், சானவாஸ், அங்கப்பன், குமார், தினேஷ், நந்தகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
- நடைபெற இருக்கின்ற நகராட்சி தேர்தலில் கடுமையாக உழைத்து அதிக அளவிலான பாட்டாளி மக்கள் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களை தருமபுரி நகராட்சியில் வெற்றி பெற செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
- தருமபுரி நகராட்சியில் அமைந்துள்ள இராமக்கா ஏரியை தூர்வாரி, முட்செடிகளை அகற்றி, மேம்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
- தருமபுரி நகர பகுதியில் சனத்குமார் நதி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றினை தூர்வாரி, கழிவுநீர் கலக்காத வண்ணம் வழிவகை செய்திடவும், கரை ஓரங்களிலுள்ள முள்செடிகளை அகற்றி மேம்படுத்திடவும் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தை கூட்டம் வலியுறுத்துகிறது.