இந்த முகாமில் பேசிய, சார்பு நீதிபதி திரு,தமிழ்செல்வன் அவர்கள், அடிப்படை சட்ட உரிமைகள், பெண்களுக்கான உரிமைகள், குழந்தைகளுக்கான உரிமைகள், மேலும் வரதட்சணை கொடுமை, பாலியல் சீண்டலுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், தொழிலாளர்கள் பிரச்சனை உட்பட பல சட்ட உரிமைகள் பற்றி எடுத்துக் கூறினார்.
அதன்பிறகு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திரு, பீட்டர் அவர்கள், வாழ்த்துரை வழங்கி வரவேற்றார். மேலும் நிகழ்ச்சியின் இறுதியாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, முகாமின் நினைவாக மரக்கன்றுகளையும் நட்டார் சார்பு நீதிபதி திரு தமிழ்ச்செல்வன் அவர்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பட்டா மாறுதல் மற்றும் ஏராளமான சான்றிதழ்களை வட்டாட்சியர் முருகேசன் வழங்கினார். இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பீட்டர், காவல் துணை கண்காணிப்பாளர் கிருத்திகா, அஞ்செட்டி வட்டாட்சியர் முருகேசன், காவல் ஆய்வாளர் குமரன், அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன்,பார் கவுன்சில் பிரசிடென்ட் பிரவீன் குமார், தலைமை நில அளவையர் பாண்டி செல்வி, அஞ்செட்டி பஞ்சாயத்து தலைவர், A.M. பாஸ்கர், பஞ்சாயத்து செயலாளர் தவமணி, காவல்துறை, வனத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சட்ட உதவி தன்னார்வலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சட்ட உதவி ஊழியர் பிரசாத் நன்றியுரை கூறினார்.