தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் சிவாடி இரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட முத்தம்பட்டி வனப்பகுதியில் மழையினால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண்சரிவினால் பாறை கற்கள் விழுந்ததன் காரணமாக கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு செல்லும் தினசரி விரைவு இரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதையொட்டி அப்பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சதிவ்யதர்சினி இஆப, அவர்கள் இன்று (12.11.2021) நேரில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி. வெங்கடேஷ்வரன் அவர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. சென்று, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் சிவாடி இரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட முத்தம்பட்டி வனப்பகுதியில் மழையினால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண்சரிவினால் பாறை கற்கள் விழுந்ததன் காரணமாக கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு செல்லும் தினசரி விரைவு இரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றவுடன் இப்பகுதிக்கு உடனடியாக வருகை தந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரயிலின் சில பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து இறங்கிவுள்ளது. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த இரயிலில் பயணம் செய்த 1340 க்கும் மேற்பட்ட அனைத்து இரயில் பயணிகளையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சேலம் மற்றும் தருமபுரி இரயில் நிலையங்களுக்கு பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இப்பகுதியில் மீட்பு பணிகளில் சேலம் கோட்டம் மற்றும் பெங்களூர் தென்மேற்கு இரயில்வே அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரயில் பாதையின் வழியாக செல்லக்கூடிய இரயில்களை சேலம் மார்கத்திலிருந்து மாற்றுப்பாதையில் செல்வதற்கு சேலம் இரயில்வே கோட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள் இம்மீட்பு பணிகளை துரிதப்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சதிவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு இராவைத்திநாதன், இஆப, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி சித்ரா விஜயன், இஆப, மற்றும் இரயில்வேத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.