கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானா முதல் பேரிகை சாலை வரை காலை மாலை நேரங்களில் சுமார் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுவருகிறது.
இதனை கட்டுப்படுத்த பேரிகை சாலை துரை ஏரி முதல் வேளாங்கண்ணி பள்ளி வழியாக புற வழிச்சாலை அமைக்கப்பட்டது இருந்தும் தற்போது சூளகிரியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் சூளகிரி பகுதிகளில் உள்ள நடைப்பாதை கடைகளை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டது, தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சூளகிரியில் நடைப்பாதை கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த கடைகளை போலீசார் உதவுயிடன் அகற்றப்பட்டது.