தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்களின் கவனத்திற்கு ஆதரவற்ற முன்னாள் படைவீரர்கள் / கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் மனைவியர்களுக்கு வயது முதிர்வு காலத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு சென்னை மைலாப்பூரில் நிம்மதி இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிம்மதி இல்லத்தில் உடற்பயிற்சி சிகிச்சை மையம், உணவருந்தும் அறை மற்றும் பொழுதுபோக்கு அறை ஆகிய அணைத்தும் வசதிகளும் உள்ளதால் விருப்பமும் தகுதியும் உடைய முன்னாள் படைவீரர்கள் / கைம்பெண்கள் இந்நிம்மதி இல்லத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.