தருமபுாி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தளமாக ஒகேனக்கல் உள்ளது. விடுமுறை நாட்களில் தருமபுாி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது கொரோனோ ஊரடங்கு காலத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னா் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. அதனையடுத்து விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புாிந்து வருகின்றனா்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மது அருந்தி விட்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் சாலைகளில் சென்று வருகின்றனா். போக்குவரத்து காவலா்களும் யாரும் கண்டுக்கொள்ளதா காரணத்தால் மது பிாியா்கள் அட்டகாசத்தால் விபத்துகளும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.