பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிட்டத்தட்ட தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவம் பார்க்க வருகின்றனர், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் இங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் துறை சார்ந்த யாரும் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே சரியான நேரத்தில் பணிக்கு வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவரச சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு செல்லும் அவல நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை மாவட்ட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது.