மழை காலங்களில் ஏற்காடு மலை தொடரில் இருந்து நீரோடைகள் மூலம் உருவாகி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்னீர் நிரம்பும் முக்கிய ஆதாரமாக பீனி ஆறு இருந்து வருகின்றது.
இந்த ஆற்றில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இயங்கும் தனியர் கிழங்கு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலக்கப்படுவதாக கூறப்படுகின்ற நிலையில் ஆற்று நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கினறுகளின் உள்ள நீர் மாசடைந்து குடிப்பத்கு பயன்படுத்த முடியாத நிலையும், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையும் உருவாகி வருகின்றது.
எனவே பொதுப்பணி துறை அதிகாரிள், மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆற்று தண்ணீரில் கழிவு நீர் கழக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- செய்தியாளர் நந்தகுமார்.