தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2016ம் ஆண்டு முதல் 5ஆண்டுகளாக தொடர்ந்துசெயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருந்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகளின்படி தருமபுரி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம்.
அரசின் மானியத்துடன் நிர்ணயிக்கப் பட்டுள்ள காப்பீடு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.521.25 செலுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள், பொது சேவை மையங்களில் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களின் நெல் சாகுபடிக்கான அடங்கல், ஆதார் காப்பீடு பதிவிற்கான விண்ணப்பம், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
காப்பீடு பதிவு செய்யப்படும் அடங்கலில் உள்ள வருவாய் கிராமம், சாகுபடி பரப்பு விபரம், வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விபரங்களை ஒப்புகைச் சீட்டில் சரிபார்த்து பெற வேண்டும். காப்பீடு பதிவின் ஆவணங்களின் ஒரு நகலினை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நவம்பர் 15-ம் தேதி காப்பீடு பதிவு செய்வதற்கான கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல், முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.