Type Here to Get Search Results !

ஒத்திவைக்கப்பட்ட குழந்தைகள் தின விழா; மீண்டும் நடைபெறும் கோ.க. மணி நம்பிக்கை தெரிவித்தார்.

பென்னாகரத்தில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக,  மாறுபட்ட கோணத்தில் நடத்திட திட்டமிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் செய்த நிலையில் ஒத்திவைப்பு -  ஜி.கே.மணி தலைவர் பா.ம.க பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்.

பென்னாகரத்தில் குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாக நடத்தி ஒவ்வொரு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள்- கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கும் தனித்தனியே பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், அனைத்து இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும், அனைத்து பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர்கள் - செயலாளர்களுக்கும், அனைத்து பள்ளிகளின் கல்வி மேலாண்மைக் குழு தலைவர்கள் - செயலாளர்களுக்கும், அனைத்து மாணவ - மாணவியர் விடுதிகளின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் - விடுதிக் காப்பாளர்களுக்கும், சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர், கல்வித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்கும் வகையிலும் ஏற்பாடுகள் தனிக்கவனம் செலுத்தி செய்தேன்.       

மாணவ - மாணவிகள் நன்கு படிக்க ஊக்கப்படுத்துவது, தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது, மாணவச் செல்வங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியப் பெருமக்களை பாராட்டுவது, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் - செயலாளர்கள், கல்வி மேலாண்மைக் குழு தலைவர்கள் - செயலாளர்கள் ஆகியோர் அவர்கள் பள்ளிகளை மேம்படுத்த அவர்களை ஊக்க்ப்படுத்துவது,விடுதி தேர்வுக் குழு உறுப்பினர்கள் - விடுதிக்காப்பாளர்கள் மாணவச் செல்வங்களை பாதுகாத்திட உற்சாகப்படுத்துவது, சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் நலன்களில் அதிக கவனம் செலுத்திட ஊக்கப்படுத்துவது போன்ற எல்லோரையும் பங்கேற்கச் செய்து பரிசுகள் வழங்கி சிறப்பிப்பதற்கான விழா ஏற்பாடுகள் நடந்தது. இந்த ஏற்பாடுகளில் கல்வித் துறை அதிகாரிகள் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட்டது பாராட்டும் வகையில் இருந்தது. தவிர்க்க முடியாமல் ஒத்திவைத்ததுதான் துரதிஷ்டவசமாக அமைந்து விட்டது,  மீண்டும் விரைவில் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies