இந்த ஆற்றின் குறுக்கே வள்ளிமதுரை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுயுள்ளது. தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடும் உயரம் 34.5 அடியாகும், இந்த தடுப்பணை மூலம் கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடும்பியாம்பட்டி, கூக்கடப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடியாம்பட்டி, ஈட்டியம்பட்டி, கம்மாளம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உட்பட 15க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள 25-க்கு மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமித்து பயன் பெறலாம்.
அணையின் இடதுபுற, வலதுபுற கால்வாய் மூலம் நேரடியாக 2853 ஏக்கர் நிலமும், ஏரிகளின் மூலம் 2255 ஏக்கர் என மொத்தம் 5108 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெரும். தொடர் மழை காரணமாக நேற்றைய நிலவரப்படி 31 அடியாக தண்ணீர் நிரம்பி உள்ளது. தடுப்பணை நிரம்புவதற்கு இன்னும் 3.5 அடி தண்ணீரே தேவை என்பதால் சம்பந்தப்பட்ட துறையினர் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.