வடகிழக்கு பருவமழை தற்போது பெய்துகொண்டிருக்கும் நிலையில் மாவட்டத்தின் பல்வறு பகுதிகளில் பருவ மழையின் காரணமாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள மூக்கன்டப்பள்ளி அடுத்த எம்.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா வயது 70, நேற்று நள்ளிரவு அவரின் வீட்டின் மண் சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய 70 வயதான கிருஷ்ணப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.