தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கான தகுதியான தனியார் துறை வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் வருகின்ற 13.11.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே இவ்வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 13.11.2021 சனிக்கிழமை அன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய, படிக்காத மற்றும் 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ. பாலிடெக்னிக், இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், இளங்கலை பொறியியல் (B.E) பட்டம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் (ஆண், பெண் இருபாலரும்) கலந்து கொண்டு, தங்களுக்கான தகுதியான தனியார் துறை வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.