மாவட்ட அளவில் பங்கேற்று வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத்தொகை ரூ. 5000.00 இரண்டாம் பரிசுத்தொகை ரூ.2000.00 மற்றும் 3-ம் பரிசுத்தொகை ரூ.1000.00 வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் முதல் வெற்றியாளர் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்.
மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25000.00, 2ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3ம் பரிசு ரூ 5 ஆயிரம் வழங்கப்படும். இதே போல் மாநில அளவில் வெற்றிபெறும் முதல் வெற்றியாளர் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பப்படுவார்.
தேசிய அளவில் முதல் பரிசு ரூ 2 லட்சம் 2ம் பரிசு ரூ. லட்சம் 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள 2021 ஏப்ரல் 1ம் தேதியன்று 18 முதல் 29 வயதுள்ள ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் போட்டிகள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் நடத்தப்படும்.
பங்கேற்க விரும்பும் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள் மற்றம் பெண்கள் மாவட்ட இளைஞர் அலுவலர் நேரு யுவ கேந்திரா எண் 5-584 அவ்வையார் தெரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தருமபுரி-636705 என்ற முகவரிக்கு உரிய விண்ணப்பம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.11.2021 மேலும் விபரம் அறிய அலுவலக தொலை பேசி எண். 233820 ஞா.வேல்முருகன் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர். நேரு யுவ கேந்திரா அவர்களை தொடர்புகொள்ளவும். மேற்கண்ட தகவலை பிரேம் பரத் குமார் நுலகசாவல்லா மாவட்ட இளைஞர் அலுவலர் நேரு யுவ கேந்திரா தெரிவித்துள்ளார்.
.gif)
